×

மாஜி மனைவி ரூ.1 கோடி கேட்டு கணவரை மிரட்டுகிறார்: நடிகை வனிதா புகார்

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  பின்னர் அவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பிறகு இரண்டாவது கணவர் ராஜனுடன் ஏற்பட்ட மோதலில் அவரையும் விவாகரத்து  செய்தார். வனிதாவின் மகன், முதல் கணவரான ஆகாஷிடம் வளர்ந்து வருகிறான். மகள், வனிதாவுடன்  இருக்கிறார். இதற்கிடையே, தந்தை விஜயகுமாருடன் சொத்து தகராறு காரணமாக சர்ச்சையில் சிக்கினார் வனிதா. இந்நிலையில், திடீரென இரு தினங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து  கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து எலிசபெத் ஹெலன் என்ற  மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து  வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.கணவர் பீட்டர் பால் நடிகை  வனிதாவை திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்ததும் பீட்டர் மீது அவரது மனைவி  எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.

இந்த புகாரில், ‘பீட்டருக்கு ஏற்கனவே என்னுடன்  திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக 7  ஆண்டுகள் தனித்து வாழ்ந்து வருகிறோம். முறையாக விவாகரத்து அளிக்காமல்  பீட்டர் பால் வேறொரு பெண்ணை (வனிதா) திருமணம் செய்துள்ளார். எனவே சட்டப்படி  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எலிசபெத் ஹெலன் புகாரில்  கூறியிருந்தார். இதுபற்றி வனிதா கூறியதாவது: இந்த புகார் எதிர்பார்த்ததுதான். 8 வருடத்துக்கு முன்பே பீட்டர் பால், அவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். எங்கள் திருமண விவகாரம் கூட அவர்களுக்கு தெரியும். எலிசபெத் ஹெலன், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். அதற்காகவே இப்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். ஏற்கனவே இதுபோன்ற பல பிரச்னைகளை நான் சந்தித்திருக்கிறேன். இதனால் எங்கள் வாழ்க்கை பாதிக்க வாய்ப்பில்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்.  இவ்வாறு வனிதா கூறினார்.

முதல் கணவரை பிரிந்த பிறகு மகனை வளர்க்கும் விவகாரத்தில் கணவர் ஆகாஷுடன் வனிதாவுக்கு மோதல் ஏற்பட்டது. பின்னர் இரண்டாவது கணவர் ராஜனை பிரிந்த பிறகு அவருடன் மகளை வளர்க்கும் விவகாரம் உள்பட பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாவது திருமணமாகி மறுநாளே புதிய பிரச்னையை வனிதா சந்தித்துள்ளார்.


Tags : Manji , Manji's wife threatens husband with Rs 1 crore request
× RELATED அளவுக்கு அதிகமாக மது குடித்த பீகார் மாநில தொழிலாளி சாவு